அதிமுகவில் இருந்த போது தங்கத்தமிழ் செல்வன் தன் பெயரில் மேகமலையிலுள்ள ஒரு எஸ்டேட்டை வாங்கியதாக தேனி மாவட்ட கூடலூர் நகர செயலாளர் அருண்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுகவில் இருந்த போது தேனி மாவட்ட செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன், அப்போது மேகமலையில் தன் பெயரில் எஸ்டேட் வாங்கியதாகவும், அவரிடம் 100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும் தேனி மாவட்ட கூடலூர் நகர செயலாளர் அருண்குமார் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ் செல்வன் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2 ஆயிரம் கோடி ஊழல் செய்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கேரளாவில் சொத்து சேர்த்ததாக, தங்கத்தமிழ் செல்வன் ஒரு மலையாள நாளிதழில் சுட்டிக்காட்டியதாகவும், ஊழல் செய்து தங்க தமிழ்செல்வன் சம்பாதித்த சொத்துக்களை பட்டியலிட தான் தயாராக உள்ளதாகவும், இவர் எப்படி துணை முதல்வரை குறை கூறலாம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.