காமராஜர் நினைவு நாள் – முதலமைச்சர் விஜய் புகழ் வணக்கம்!

தன்னலமற்ற பொதுச்சேவைக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்த கர்மவீரரின் ஒப்பற்ற தியாகத்தைப் போற்றி அவர் காட்டிய நல்வழியில் தொடர்ந்து பயணிப்போம் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “எளிமையான வாழ்க்கையாலும், நேர்மையான நிர்வாகத்தாலும் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்கள்!

கிராமந்தோறும் பள்ளிகளைத் திறந்து, மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி கல்விப் புரட்சிக்கு வித்திட்டதோடு, எண்ணற்ற பொதுத்துறை நிறுவனங்கள், அணைகள் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்கி, தொழில் முன்னேற்றத்திற்கும், வேளாண் வளர்ச்சிக்கும் வித்திட்டவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்.

தன்னலமற்ற பொதுச்சேவைக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்த கர்மவீரரின் ஒப்பற்ற தியாகத்தைப் போற்றி அவர் காட்டிய நல்வழியில் தொடர்ந்து பயணிப்போம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.