ரீமேக் ஆகும் கமல்ஹாசனின் ‘சத்யா’… ஹீரோவாக நடிக்கும் அசோக் செல்வன்…

அசோக் செல்வன் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த போர் தொழில் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அவர் மீண்டும் நடிக்கவுள்ளதாகவும், கமல்ஹாசனின் ‘சத்யா’ படத்தை ரீமேக் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சத்யா,…

இப்படத்தில் கமலின் கெட்டப் அப்போது இருந்த இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது வரை இருக்கும் இளம் இயக்குநர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக விளங்கி வருகிறது. சில கதைகளை விளக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல, உணர்வு ரீதியாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும் அவ்வாறு உணர்வு கலந்த சாமானியனின் சவுக்கடி தான் இந்த சத்யா. இக்கால இயக்குனர்கள் பலருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அந்த படம் இன்றளவும் திகழ்ந்து வருகிறது என்றால் அது மிகையல்ல.இந்நிலையில் ஒரு தனியார் youtube சேனல் வெளியிட்டுள்ள தகவலின்படி, “போர் தொழில்” திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் ராஜா, சத்யா திரைப்படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டு வருவதாகவும், பிரபல நடிகர் அசோக் செல்வன் இந்த திரைப்படத்தில் உலகநாயகனின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.