முக்கியச் செய்திகள் தமிழகம்

இன்று ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிக்கிறார் கமல்ஹாசன்!

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு தரும்படி நடிகர் ரஜினிகாந்திடம் கமல்ஹாசன் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மூன்றாம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு இன்று மதியம் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் சென்னை திரும்பிய பிறகு இன்று மதியம் போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 29 ஆம் தேதி தான் அரசியலுக்கு வரவில்லை என்றும் தொடர்ந்து மக்கள் பணியை ஆற்ற வேண்டும் எனவும் ரசிகர்களுக்கு அறிக்கை மூலமாக தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார். உடல் நலத்தை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல அவர் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் கடந்த 3 நாட்களாக போயஸ்கார்டன் இல்லத்தில் வா தலைவா வா என்ற கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினியை சந்திக்கும் கமல்ஹாசன் 2021 சட்டமன்ற தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அவரிடம் கேட்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதல் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுற்றது!

EZHILARASAN D

தன் குருநாதர் ரஜினியிடம் ஆசி பெற்றார் நடிகர் ராகவா லாரன்ஸ், எதற்கு தெரியுமா ?

G SaravanaKumar

25 கிலோவுக்கு வரி – 26 கிலோவாக அரிசி தயாரிக்கும் ஆலைகள்

Dinesh A

Leave a Reply