முக்கியச் செய்திகள் இந்தியா

முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்? 6-வது கட்ட பேச்சுவார்த்தையில் 2 கோரிக்கைகளில் உடன்பாடு!

மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் இரண்டு விஷயங்களில் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியை சுற்றி ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் ஆறாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. அப்போது சுற்றுச்சூழல் தொடர்பான அவசர சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது குறித்து இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இது தவிர வேறு ஒரு முக்கிய விஷயத்திலும் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த கட்டமாக ஜனவரி 4 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக விவசாயிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தோமர், பேச்சுவார்த்தை நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார்.

Advertisement:

Related posts

ஊரடங்கு சலுகைகள் அறிவிப்பு!

Jeba

பாஜகவில் இணைந்தார் இளம் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதா!

Ezhilarasan

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க தயார்; பியூஸ் கோயல்

Jayapriya

Leave a Reply