கோவை முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கார் பரிசளித்தார்.
கோவை வடவள்ளியைச் சேர்ந்த ஷர்மிளா என்ற இளம்பெண் கோவை காந்திபுரம் முதல் சோமனூர் வரையிலான வழித்தடம் எண் 20 ஏ ல் இயக்கப்படும் வீ வீ எனும் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்தில் ஓட்டுநராக கடந்த மார்ச் மாதம் முதல் பணியாற்றி வந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோவை முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்பதால், கோவை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார். பலரும் ஷர்மிளாவிற்கு நேரிலும் சமூக வலைதலங்களிலும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், அரசியல் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில், திமுக எம்பி கனிமொழி, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் ஷர்மிளா பணி செய்த பேருந்தில் பயணித்து நேரில் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் பேருந்தின் உரிமையாளருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஷர்மிளா ஓட்டுநர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பெண் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு மாருதி சுசூகி எர்டிகா காரை இன்று பரிசளித்தார். சென்னையில் உள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்திற்கு ஓட்டுநர் ஷர்மிளாவை வரவழைத்த கமல்ஹாசன் அந்த காரை பரிசாக அளித்தார்.
”பேருந்து ஓட்டும் வேலை இழந்த பெண் ஓட்டுநருக்கு கார் கொடுத்து தொழில் முனைவோர் ஆக்கிய நம்மவர்” என குறிப்பிட்டு மக்கள் நீதி மய்யம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.