32.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

ஜிம் மாஸ்டருக்கு காரை பரிசாக வழங்கிய கமல்ஹாசன்

இந்தியன் 2 படத்திற்காக தன்னை தயார்படுத்திய பயிற்சியாளருக்கு கமல்ஹாசன் ரெனால்ட் காரை பரிசாக வழங்கினார்.

கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆன பிறகு ’இந்தியன் 2’ படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வந்தார். லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிரேன் விபத்து, கொரோனா பரவல், பட்ஜெட் தொடர்பான ஷங்கருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் ஏற்பட்ட பிரச்சினை எனப் பல காரணங்களால் பலமுறை தள்ளிப்போடப்பட்டது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தற்போது சென்னையில் இந்தியன் – 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியன் 2 படத்துக்காக கமல் அதிகம் ஃபிட்னஸ் ட்ரெய்னிங் எடுத்து வந்துள்ளார். இதற்காக கமலுக்கு ஃபிட்னஸ் ட்ரெய்னர் தீவிரமாக பயிற்சி அளித்துள்ளார். இந்நிலையில் இந்தியன் 2 படத்திற்காக தன்னை தயார் படுத்திய உடற்பயிற்சியாளரை குடும்பத்தினருடன் வரவழைத்து ரெனால்ட் காரை கமல்ஹாசன் பரிசாக வழங்கியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜிம் மாஸ்டருக்கு கமல் கார் பரிசளித்த சம்பவம் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. சில மாதங்கள் முன்னர் விக்ரம் படத்தின் வெற்றிக்காக லோகேஷ் கனகராஜுக்கு விலையுயர்ந்த சொகுசு காரைரும், அவருடன் பணிபுரியும் உதவி இயக்குநர்களுக்கும் பைக் பரிசளித்து பாராட்டியது குறிப்பிடதக்கது.

 

அ.மாரித்தங்கம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading