‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘கல்கி 2898…

‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’.  இத்திரைப்படத்தில் நடிகர்கள் ராணா டகுபதி,  கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.   இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.  இத்திரைப்படம் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது.

முன்னதாக ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் நடிகர் பிரபாஸின் பெயர் பைரவா எனக் குறிப்பிட்டு படக்குழு போஸ்டரை வெளியிட்டு இருந்தது.  இதனையடுத்து,  இப்படத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டது.  படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கு அஸ்வத்தாமா என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வந்தனர்.  இந்த நிலையில்,  இத்திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  அதன்படி இத்திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாக உள்ளது.

https://twitter.com/Kalki2898AD/status/1784189891422646615

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.