சென்னையைச் சேர்ந்த களரி மாஸ்டர் மதுரவாயில் பகுதியில் இருந்து ஆன்லைனில் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென வாந்தி எடுத்தபடியே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மைலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் கிரிதரன்(29). மதுரவாயல், ஆலப்பாக்கம்
பகுதியில் களரி பயிற்சி மையம் வைத்து நடத்தி வந்தார். தனியார் யூடியூப்
சேனலில் இவர் குறித்த செய்தி வெளியிடுவதற்காக பணிகள் நடந்து வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்காக நேற்று மாணவர்களுக்கு ஆன்லைனில் களரி பயிற்சி கொடுத்து வந்தபோது திடீரென வாந்தி எடுத்தபடியே மயங்கி கீழே விழுந்தார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் இறந்த போன கிரிதரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களரிப்பயிற்று என்ற பெயரில் கேரளாவில் இந்தக் கலை கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கலை கேரளாவில் தான் தோன்றியது.
இந்தப் பயிற்சி பெண்களுக்கு இது அதிக மனப்பக்குவத்தை தரும் என்று கூறப்படுகிறது. களரி பயிற்சி பெறும் பெண்கள் எத்தகைய ஆபத்தையும் சமாளிக்கும் ஆற்றலையும் பெறுவார்கள். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் கொண்டவர்கள் களரி பயிற்சி பெறுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
-மணிகண்டன்