முக்கியச் செய்திகள் உலகம்

காபூல் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு

காபூல் விமான நிலையத்தில் நடந்த தற்கொலை படைத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதை அடுத்து, தலிபான்கள் ஒவ்வொரு மாகாணத்தையாக கைப்பற்றத் தொடங்கினர். கடந்த 15 ஆம் தேதி தலைநகர் காபூலையும் கைப்பற்றிவிட்டனர். இதையடுத்து அமெரிக்கா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு மக்களை விமானங் கள் மூலமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் தலிபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்களும் அண்டை நாடுகளுக்குத் தப்பி செல்ல முயன்று வருகின்றனர். இதற்காக காபூல் விமான நிலையத்துக்கு உள்ளும் வெளியும் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.

விமான நிலையத்தை அமெரிக்காவின் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். காபூல் நகரை தலிபான் கைப்பற்றியதில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே நேற்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. விமான நிலையத்தின் அபே வாயில் அருகிலும், அந்த வாயில் அருகிலுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அருகிலும் இந்த குண்டு வெடிப்புகள் நடந்தன.

இதில், அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 13 பேர் உட்பட, 72 பேர் கொல்லப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது. இந்த குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற் றுள்ளது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இப்போது 110 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஷங்கருக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

Gayathri Venkatesan

திருவொற்றியூர் கோயிலில் சசிகலா சாமி தரிசனம்!

Saravana Kumar

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்புக் குழுக்கள் அமைப்பு!

Gayathri Venkatesan