புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே பட்டமரத்தான்
திருவிழாவை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பாண்டிமாநகரில் பட்டமரத்தான்
திருவிழாவை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், புதுக்கோட்டை,
திருச்சி, மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு
மாவட்டங்களில் இருந்து 35 அணிகள் பங்கேற்றன. இந்த கபடி போட்டியானது நாக்
அவுட் முறையில் நடைபெற்றது.
மேலும், இரு தினங்களாக நடைபெற்ற கபடி போட்டியில், முதல் பரிசாக ரூ.11,111-ஐ அரண்மனை சிறுவயல் அணி பெற்றது. 2-ம் பரிசாக ரூ. 9,999-ஐ குன்றக்குடி
அணியும், 3-ம் பரிசாக ரூ 7,777-ஐ ஏனாதி அணியும் பெற்றது. 4-வது பரிசாக ரூ 5,555-ஐ பொன்னமராவதி அணி பெற்றது.
—கு.பாலமுருகன்







