முக்கியச் செய்திகள் சினிமா

இன்ஸ்டாவில் முதன்முறையாக ஜோதிகா.. அரை மணி நேரத்தில் 13 லட்சம் பாலோயர்கள்!

முதன்முறையாக, இன்ஸ்டாகிராம் வந்துள்ள நடிகை ஜோதிகாவை அரை மணி நேரத்தில் 13 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிக்காமல் இருந்தார். பிறகு ’36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி ஆனார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர், இப்போது ’உடன்பிறப்பே’ என்ற படத்தில் நடித்துள்ளார். இரா. சரவணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சசிகுமார், சூரி உட்பட பலர் நடித்துள்ளார். இந்தப் படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

இதுவரை சமூகவலைதளங்களின் பக்கம் தலைகாட்டாமல் இருந்த நடிகை ஜோதிகா, இப்போது முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். தன் முதல் பதிவில் இதைத் தெரிவித்துள்ள ஜோதிகா, ஊரடங்கில் நடந்த பல விஷயங்களை தெரிவிக்க இருப்பதாகக் கூறியுள்ளார். .

இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள நடிகை ஜோதிகாவை அவரது கணவரும் நடிகருமான சூர்யா வரவேற்றுள்ளார். ’என் மனைவி வலிமையானவர். முதன்முறையாக இன்ஸ்டாவில் உன்னை பார்ப்பது த்ரில்லாக இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பலரும் இன்ஸ்டாகிராம் வந்துள்ள ஜோதிகாவை வரவேற்றுள்ளனர்.

அவர் இன்ஸ்டாவில் இணைந்த அரை மணி நேரத்திலேயே, அவரை 13 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

நடிகர் விவேக் மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமா? மருத்துவர் விளக்கம்

Halley karthi

நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

Halley karthi

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர்!

Jeba Arul Robinson