இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி ஆர் கவாய் செயல்பட்டு வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் நவம்பர் 23ம் தேதி உடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி என்ற அடிப்படையில் சூரிய காந்த் அவர்களின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி கவாய் பரிந்துரை செய்திருந்தார்.
அவரின் பரிந்துரையை ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவருக்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் அனுப்பி வைத்திருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சூரியகாந்த் அவர்களை நியமிக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இதனை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து வரும் நவம்பர் 24ம் தேதி முதல் நாட்டின் 53வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சூரியகாந்த் செயல்பட உள்ளார்.




