10ம் வகுப்பு பொதுத்தேர்வில் எல்லா பாடத்திலும் ஜஸ்ட் பாஸ்!! – மகனுக்கு பாராட்டு… பெற்றோர் கொண்டாட்டம் ….

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் 35 மதிப்பெண்கள் எடுத்து ஜஸ்ட் பாஸ் ஆன மகனை, பெற்றோர்கள் பாராட்டி, கொண்டாடியுள்ள சம்பவம் நெசிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் 35 மதிப்பெண்கள் எடுத்து ஜஸ்ட் பாஸ் ஆன மகனை, பெற்றோர்கள் பாராட்டி, கொண்டாடியுள்ள சம்பவம் நெசிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மும்பையைச் சேர்ந்த விஷால் என்ற மாணவன், எழுதிய 6 பாடங்களிலும் சரியாக 35 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

மராத்தி நடுநிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்த விஷால், தான் ஜஸ்ட் பாஸ் ஆனதை பெற்றோர்களிடம் காண்பித்துள்ளார். வழக்கமாக தங்களது மகனோ, மகளோ தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் பெற்றோர்கள் திட்டித் தீர்த்துவிடுவர். ஆனால், விஷாலின் பெற்றோர், ஜஸ்ட் பாஸ் ஆனதை பாராட்டி, கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

https://twitter.com/AwanishSharan/status/1666780044877008897

விஷால் ஜஸ்ட் பாஸ் ஆனது குறித்து பேசிய அவரது தந்தை, ”தங்களது மகன்/மகள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என பல பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு அதிக மதிப்பெண்களை பெற்றால் மட்டுமே அவர்களை பாராட்டுகின்றனர். கொண்டாடுகின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை விஷால் எடுத்த 35% மதிப்பெண்கள் கூட பெரிய விஷயம்தான்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : நாக்கில் எச்சில் ஊற வைக்கும் உலகின் தலைசிறந்த உணவு வகைகளை கொண்ட 10 நாடுகள்!!

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் 35 மதிப்பெண்கள் எடுத்து ஜஸ்ட் பாஸ் ஆன மகனை, பெற்றோர்கள் பாராட்டி, கொண்டாடியுள்ள சம்பவம் நெசிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.