ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.   தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி, கல்லூரி…

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

 

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையில் பள்ளி, கல்லூரி முதல்வர், DEO, MLA, ஆதிதிராவிடர் இன உறுப்பினர்கள் இருவர் என்ற அடிப்படையில் ஆலோசனைக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் குழுவை மாவட்ட ஆட்சியர் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குழு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும் 1,324 விடுதிகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் வழியிலேயே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

அரசுப் பள்ளிகள், அரசுக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விடுதிகளை ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, 1,324 விடுதிகளையும் அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்தி உணவு மற்றும் அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.