வெளியானது ஜோக்கர் 2 டிரெய்லர் | DC ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஜோக்கர் 2 திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகி DC ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.  டிசி காமிக்ஸ் வில்லனான ஜோக்கர் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ‘ஜோக்கர்’. ஹாக்கின் ஃபீனிக்ஸ் நடித்த இப்படத்தை…

ஜோக்கர் 2 திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகி DC ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

டிசி காமிக்ஸ் வில்லனான ஜோக்கர் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ‘ஜோக்கர்’. ஹாக்கின் ஃபீனிக்ஸ் நடித்த இப்படத்தை டோட் பிலிப்ஸ் இயக்கியிருந்தார். படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜோக்கராக நடித்த ஹாக்கின் ஃபீனிக்ஸுக்கு பத்திரிகைகளிடமிருந்தும், விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இப்படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டது.

17 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் ஆர் ரேட்டட் படமான ‘ஜோக்கர்’ உலகமெங்கும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்தது. அதிக வசூல் செய்த ஆர் ரேட்டட் படங்களில் இப்படமும் ஒன்று.

இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை டிசி காமிக்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. மியூசிக்கல் திரைப்படமாக உருவாகும் இதில் பிரபல பாப் பாடகி லேடி காகா நாயகியாக நடிக்கிறார். இப்படத்துக்கு ‘ஜோக்கர்: ஃபாலி அ டியூக்ஸ் (Joker: Folie à Deux) என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

 

https://youtu.be/2UInBwhQQ0A?si=BH4Qmi3jzqeJwdJs

 

 

இந்நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.  கிராஃபிக்ஸ் எதுவும் இல்லாமல், முதல் பாகத்தை போன்றே மிகவும் இயல்பாக நம்பும்படியாக இரண்டாம் பாகமும் உருவாகியுள்ளது.வாக்கின் பீனிக்ஸ் மீண்டும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். லேடி காகாவின் நடிப்பும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், ஏற்கனவே ஹார்லி குவின் கதாபாத்திரதம் மூலம் கவனம் ஈர்த்த, மார்கட் ராபி அளவிற்கு இருக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.