வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘#Joker2’… 11 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டிய பார்வையாளர்கள்!

வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ஜோக்கர் 2 திரைப்படத்தை பார்த்த அனைவரும் 11 நிமிடம் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டினர். டூட் ஃபிலிப்ஸ் இயக்கத்தில்,  ஜாக்குவன் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு…

'Joker 2' at the Venice International Film Festival! The audience stood up and applauded for 11 minutes!

வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ஜோக்கர் 2 திரைப்படத்தை பார்த்த அனைவரும் 11 நிமிடம் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டினர்.

டூட் ஃபிலிப்ஸ் இயக்கத்தில்,  ஜாக்குவன் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜோக்கர்’.  இப்படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது.  ஜோக்கராக நடித்த ஹாக்கின் ஃபீனிக்ஸுக்கு பத்திரிகைகளிடமிருந்தும்,  விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இப்படத்துக்காக அவருக்கு ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.

17 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் ஆர் ரேட்டட் படமான ‘ஜோக்கர்’ திரைப்படம் உலகமெங்கும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது.  இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை டிசி காமிக்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனங்கள் உருவாக்கி உள்ளன.

மியூசிக்கல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஜாக்குவன் பீனிக்ஸ் நாயகனாகவும், பிரபல பாப் பாடகி லேடி காகா நாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ‘ஜோக்கர்: ஃபாலி அ டியூக்ஸ் (Joker: Folie à Deux) என்று பெயரிடப்பட்டுள்ளது.  சமீபத்தில் இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலானது.

ஜோக்கர் 2 திரைப்படம் அக்டோபர் 4ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படம் 81ஆவது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது, அரங்கத்தில் இருந்த அனைவரும் 11 நிமிடம் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.