பேபி பவுடர் மூலம் புற்றுநோய் என வழக்கு: ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் 18.8 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவு!

ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு 18.8 மில்லியன் டாலர்கள் இழப்பீடாக வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்காவின்…

ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு 18.8 மில்லியன் டாலர்கள் இழப்பீடாக வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் ஹெர்னாடஸ் என்ற 24 வயது இளைஞர் கடந்த ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சிறுவயது முதல் ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் பயன்படுத்தி வருவதாகவும், அதன் காரணமாக இதயத்தைச் சுற்றியுள்ள திசுக்களில் மீசோதெலியோமா என்ற கொடிய புற்றுநோய் உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் அவர் கேட்டுக்கொண்டார்.

மனுவை விசாரித்த நீதிபதி, ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் நிறுவனத்திற்கு எதிராக இதுபோன்ற பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். எனவே மனுதாரருக்கு இழப்பீடாக 18.8 மில்லியன் டாலர்கள் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் வழங்க உத்தரவிட்டார்.

இதனிடையே ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் பயன்படுத்துவதால் கேன்சர் உருவாக வாய்ப்பில்லை என ஆய்வுகள் கூறுவதாக தெரிவித்துள்ள அந்த நிறுவனம் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.