முக்கியச் செய்திகள் தமிழகம்

மீண்டும் வெடித்த ‘கர்ணன்’ விவகாரம்; உதயநிதி ட்வீட்!

கர்ணன் திரைப்பட இயக்குநர் மற்றும் படக்குழுவினரின் நடவடிக்கைக்கையை உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்தின் மையக் கருவான சம்பவம் ஒன்று 1997ல் நடந்ததாக திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற வேட்பாளரான உதயநிதி ஸ்டாலின், “1995 அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவம் 1997ல் நடந்ததாக திரைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.” எனக்கூறியிருந்தார். மேலும், இது குறித்து இயக்குநரிடம் வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து படக்குழுவினார் 1995 என மாற்றத்தை செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது உதயநிதி இது குறித்து ட்விட்டரில் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில், “கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் – இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை திருத்திக்கொள்வதாக உறுதியளித்து அதை இன்று செய்துள்ளனர். படைப்பிலுள்ள பிழையை சுட்டிக்காட்டுகையில் அதை திருத்திக்கொள்வது வரவேற்புக்குரியது. கொடியன்குளம் கலவரம் 1995-ல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும் ’90-களின் இறுதியில்’ என திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை. அதை யாராலும் மறுக்கவோ-மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

Advertisement:

Related posts

திருச்செந்தூரில் இன்று நிறைவு பெறுகிறது பாஜகவின் வேல் யாத்திரை!

Saravana

தனியார் மருத்துவமனைகளில் 18-ம் தேதி முதல் ரெம்டெசிவர் விநியோகம்: தமிழக அரசு

Karthick

விருதுநகர் பட்டாசு ஆலையில் திடீர் விபத்து!

Karthick