இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் நியமனம்

அமெரிக்காவின் இந்திய வெளிநாட்டு தூதுவராக லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரின் மேயர் எரிக் கார்செட்டி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இந்தியாவுக்கான தூதுரை அமெரிக்கா மாற்றவில்லை. ஆனால், தற்போது கென்னத் ஜெஸ்டருக்கு…

அமெரிக்காவின் இந்திய வெளிநாட்டு தூதுவராக லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரின் மேயர் எரிக் கார்செட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இந்தியாவுக்கான தூதுரை அமெரிக்கா மாற்றவில்லை. ஆனால், தற்போது கென்னத் ஜெஸ்டருக்கு பதில் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரின் மேயர் எரிக் கார்செட்டி நியமிக்கப்பட்டுள்ளதாக அதிபர் பைடன் அறிவித்துள்ளார்.

முன்னதாக கென்னத் ஜெஸ்டர் வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலில் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து இந்தியாவுக்கான புதிய தூதர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு மேலெழுந்திருந்தது. இதற்கிடையே இந்த நியமனத்தை அதிபர் அறிவித்துள்ளார். எரிக் கார்செட்டி கடந்த 2013லிருந்து லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரின் மேயராக பணியாற்றி வருகிறார். 12 முறை நகர கவுன்சில் உறுப்பினராகவும், 6 முறை அதன் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ளவராவார்.

லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரம் உலகின் மிக பரபரப்பான விமான நிலையம் கொண்ட நகரமாகும், இந்நகரில் 2028ல் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ரிசர்வ் கடற்படையில் புலனாய்வு அதிகாரியாக 12 ஆண்டுகளும், அமெரிக்க பசிபிக் கடற்படை மற்றும் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் கீழ் சில ஆண்டுகளும் பணியாற்றி 2017ல் லெப்டினன்டாக ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.