தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையில் ரூ. 35,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து அறநிலையத் துறையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஜூனியர் அசிஸ்டென்ட், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், எக்ஸிகியூட்டிவ் டிரெயினிங் சென்டர் ஹெட் உள்ளிட்ட பணிகள் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் Msc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பப் படிவத்தை இந்து சமய அறநிலையத் துறையின் tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அசிஸ்டென்ட் கமிஷனர் / எக்ஸிக்யூட்டிவ் ஆபிசர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி – 631209 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மேற்கண்ட முகவரிக்கு ஜூலை 13ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








