குலசேகரப்பட்டனத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவதன் மூலம் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் குலசேகரப்பட்டினம் தொழிற்சாலை மிகுந்த பகுதியாக மாற வாய்ப்பு இருக்கிறது என இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன் விருதுநகரில் பேட்டியின் போது கூறினார்.
விருதுநகரில் மாவட்டத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லுாரியில் 46 வது பட்டமளிப்பு விழாவிற்கு கலந்து கொள்ள வருகை தந்த இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்திற்து தன் குடும்பத்துடன் சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பார்வையிட்டார். மேலும் பராசக்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் பெற்றார்.
சிவன் வருகையொட்டி அம்மனுக்க சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளரை சந்தித்தார் அவர் இஸ்ரோவில் நிறைய வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் முக்கியமான திட்டமாக விண்ணிற்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான வேலைகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் சந்திராயன் 3 விண்ணில் ஏவுவதற்கும், சூரியனை ஆராயக் கூடிய ஆதித்யா 1 விண்கலமும் தயராகி கொண்டிருக்கிறது என்றார். மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்கான செலவு குறைவு என்பதால் அண்டை நாடுகளில் இருந்து நம்முடைய நாட்டில் விண்கலத்தை வானில் விடுகிறார்கள் மற்றும் நம்முடைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மற்ற நாடுகள் அவர்களுடைய செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ விருப்பப்படுகிறார்கள் என்றார்.
டிஜிட்டல் இந்தியா வந்த பிறகு இஸ்ரோவின் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது . தற்போது தமிழ்நாட்டில் குலசேகரப் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தேவையான நிலங்களை தமிழக அரசு வழங்கிய பின்னர் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது விரைவில் அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றார்.
குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளம் மூலம் சிறிய SSLV என்னும் ரக ராக்கெட்டுகள் ஏவப்பட உள்ளன எனவும் ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிக்கம் தொழிற்சாலை வர வாய்ப்பு உள்ளதாகவும் சிவன் தெரிவித்தார். குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவதன் மூலம் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தொழிற்சாலை மிகுந்த பகுதியாக மாற வாய்ப்பு இருக்கிறது என இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்தார்.
அனகா காளமேகன்