ஜியோ ஏர் ஃபைபர் செப். 19ம் தேதி அறிமுகம் – முகேஷ் அம்பானி அறிவிப்பு..!

செப்டம்பர் 19-ம் தேதி முதல் அதிவேக இணையவசதி கொண்ட வயர்லெஸ் ஜியோ ஏர் ஃபைபர் அறிமுகம் செய்யப்படும் என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் 46-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முகேஷ்…

செப்டம்பர் 19-ம் தேதி முதல் அதிவேக இணையவசதி கொண்ட வயர்லெஸ் ஜியோ ஏர் ஃபைபர் அறிமுகம் செய்யப்படும் என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 46-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, கடந்த நிதியாண்டில் புதிதாக 2 லட்சத்து 60 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி ரிலையன்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார். கடந்தாண்டு அக்டோபரில் தொடங்கிய ஜியோ 5ஜி சேவை பெருநகரங்களில் 96%பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், நாடு முழுவதும் டிசம்பருக்குள் ஜியோ 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும் எனவும் கூறினார். ஒரு நபர் சராசரியாக மாதத்திற்கு 25 ஜி.பி. ஜியோ டேட்டாவை பயன்படுத்துவதாகவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.

ஜியோ ஏர் ஃபைபர் திட்டத்திற்கான அறிமுக பணிகளை பல மாதங்களாக செய்துவந்த நிலையில் செப்டம்பர் 19-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஜியோ ஏர்ஃபைபர் 5ஜி பிராண்ட்பேன்ட் சேவை அடுத்த 2 வருடத்தில் 200 மில்லியன் வீடுகளில் இணைக்கப்பட உள்ளது.

இதனிடையே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து நீதா அம்பானி விலகியுள்ளார். இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்குனர் குழுவில் இருந்து ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானி விலகுவதாகவும், அவரது ராஜினாமாவை இயக்குனர் குழு ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதா அம்பானி இனி ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராக மட்டுமே தொடர்வார் என்றும், நிர்வாக குழு கூட்டங்களின் நிரந்தர அழைப்பாளராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.