ராசிபுரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்த பட்டாசுகள்; 3 பேர் படு காயம்!

ராசிபுரத்தில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3 பேர் காயமடைந்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வி.நகர் பகுதியை சேர்ந்த கண்ணன் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு ஏற்பட்ட தீ…

ராசிபுரத்தில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3 பேர் காயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வி.நகர் பகுதியை சேர்ந்த கண்ணன் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறின. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை கட்டுபடுத்தினர்.

வீட்டின்மூன்றாவது மாடியில் சிக்கி தவித்த கண்ணன் குடும்பத்தினரை கையிறு கட்டி பத்திரமாக அவர்கள் மீட்டனர். பட்டாசு வெடித்ததில் கண்ணன் படுகாயம் அடைந்த நிலையில் அவரின் மனைவி, இரண்டு மகன்கள் உள்ளிட்டோர் லேசான தீக்காயங்களுடன் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் காரணமாக சுற்றுவட்டார குடியிருப்பில் இருந்து அனைத்து மக்களும் வீட்டை விட்டு வெளியேறினார். வெடி விபத்து நடந்த வீட்டை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் உமா விசாரணை மேற்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.