ஜில் பைடனுக்கு மீண்டும் கொரோனா!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி கொரோனா தொற்று…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, சிகிச்சை பெற்று வந்தார். இதைத்தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் நெகட்டிவ் எனத் தெரியவந்தது.

இந்நிலையில், ஜில் பைடனுக்கு இன்று ஆன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவுகள் வந்துள்ளன. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிரு்தாலும் அவருக்கு அறிகுறிகள் எதுவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்த சிலர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தொடர்ந்து இருமுறை பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என முடிவுகள் வர வேண்டும் என்றும், அதுவரை அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஜில் பைடனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த ஜூலை மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். இன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்குத் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.