திடீரென பரவிய வதந்தியால் கீழே குதித்த பயணிகள் – சரக்கு ரயில் மோதி 3 பயணிகள் உயிரிழப்பு!

ரயிலில் தீ பரவியதாக வெளியான தகவலை உண்மை என நம்பிய பயணிகள் சிலர் உயிர் தப்புவதற்காக ஓடும் ரயிலில் இருந்து பயணிகள் கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் குமண்டி ரயில்…

ரயிலில் தீ பரவியதாக வெளியான தகவலை உண்மை என நம்பிய பயணிகள் சிலர் உயிர் தப்புவதற்காக ஓடும் ரயிலில் இருந்து பயணிகள் கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் குமண்டி ரயில் நிலையம் உள்ளது.  இந்நிலையில், குமாண் ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த சாஸாராம் ராஞ்சி இண்டர்சிட்டி அதிவிரைவு ரயிலில் நேற்று (ஜூன் 14) இரவு 8 மணியளவில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்பட்டது. திடீரென தீப்பிடித்ததாக வதந்தி பரப்பிய நிலையில்,  இதை கேட்டு  உண்மை என நம்பி, அதிர்ச்சி அடைந்த ரயில் பயணிகள் சிலர் உயிர் தப்புவதற்காக ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்தனர்.

அப்போது அருகே உள்ள ரயில் பாதையில் வேகமாக சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் அவர்கள் மீது மோதியதில் 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் இந்த விபத்து தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில்,  ரயிலில் தீ பரவியதாக வெளியான தகவலை உண்மை என நம்பிய பயணிகள் சிலர் உயிர் தப்புவதற்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.