கொரோனா பரவல் காரணமாக ஜேஇஇ முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 12ம் வகுப்பு தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக வரும் 27,28,39 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த ஜேஇஇ முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஆண்டு ஜேஇஇ முதன்மை தேர்வு நான்கு முறை நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஜேஇஇ முதன்மை தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் இந்த மாதம் 27,28,39 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வு மாணவர்கள் நலன்கருதி ஒத்திவைக்கப்படுவதாகவும், இந்த காலத்தை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தேர்வுக்கு தயாராகவேண்டும் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தேர்வு நடைபெறும் தேதி தேர்வு நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது.