முக்கியச் செய்திகள்

ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

IIT, IIM-களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு, நடத்தப்படும் JEE Advanced தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது.

நாட்டில் உள்ள 23 ஐ.ஐ.டி பொறியியல் கல்லூரிகளில் சேறுவதற்கான ஜே.இ.இ அட்வான்ஸ் நுழைவு தேர்வை கடந்த 3ம் தேதி ஐ.ஐ.டி கரக்பூர் நடத்தியது. ஜே.இ.இ முதன்மை தேர்வுகளின் முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில் ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வின் முடிவுகள் இன்று வெளியானது. நாடு முழுவதும் ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு எழுத 1,51,193 பேர் பதிவு செய்ததில் 1,41,699 பேர் மட்டுமே தேர்வு எழுதினர், இதில் 41,862 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜெய்ப்பூரை சேர்ந்த மாணவன் மிருதுல் அகர்வால் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மதிப்பெண் பெற்று புதிய இலக்கை அடைந்துள்ளார். அதாவது, 360 மதிப்பெண் தேர்வுக்கு 348 ( 96.66% ) மதிப்பெண் பெற்றுள்ளார்.

ஜே.இ.இ தேர்வு எழுதிய மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரபூர்வ இணையதளமான http://result.jeeadv.ac.in/ என்ற இணைய தளத்தில் பார்த்து கொள்ளலாம். ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து ஏ.ஏ.டி (Architecture Aptitude Test ) தேர்வுக்கு மாணவர்கள் பதிவு செய்வதற்கான இணையதளம் திறக்கப்பட்டுள்ளது. jeeadv.ac.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யும் மாணவர்களுக்கு AAT 2021 தேர்வு அக்டோபர் 18-ம் திங்கள் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும். அதற்கான முடிவுகள் அக்டோபர் 22ம் தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

வாஜ்பாய் நினைவு தினம்; பிரதமர், குடியரசு தலைவர் அஞ்சலி

Saravana Kumar

அமேசானில் தற்போது நண்பர்களுடன் பாடல்களை பகிர்ந்து கொள்ளலாம்!

Niruban Chakkaaravarthi

நாகர்கோவிலில் நாளை அமித்ஷா தேர்தல் பரப்புரை!

Niruban Chakkaaravarthi