ஓடிடியில் வெளியாகும் ஜெயம் ரவியின் ‘சைரன்’!

நடிகர் ஜெயம் ரவி நடித்த சைரன் திரைப்படம் வரும் 19 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.  பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பின் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் இறைவன்.  இப்படம்…

நடிகர் ஜெயம் ரவி நடித்த சைரன் திரைப்படம் வரும் 19 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. 

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பின் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் இறைவன்.  இப்படம் பல்வேறு விமர்சனங்களை பெற்றது.  இதனையடுத்து அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சைரன்.  இப்படத்தில் கீர்த்தி சுரேஷ்,  அனுபமா பரமேஸ்வரன்,  சமூத்திரகனி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.  இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

காவலில் இருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் பரோலில் வெளியே வருகிறார். அப்பொழுது எதிர்பாராத விதமாக பல கொலைகள் நடக்கிறது.  இந்நிலையில் காவல்துறையின் சந்தேகம் ஜெயம் ரவியின் மீது திரும்ப,  அடுத்து நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் சைரன் படத்தின் கதை.  இப்படம் வெளியாகி இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தற்போது தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது.

முன்னதாக ஏப்ரல் 11-ம் தேதி ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது 19-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.