ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ஜெயம் ரவியின் ‘இறைவன்’, ‘சைரன்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதனை அடுத்து அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ‘ஜீனி’ என்ற ஃபேண்டசி படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இதில், கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கபி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.
வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் ‘ஜீனி’ திரைப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் 25-வது திரைப்படமாக இந்த இப்படம் உருவாகி வருகிறது.
https://twitter.com/actor_jayamravi/status/1771830165745615258
இதையும் படியுங்கள் : சூடுபிடிக்கும் தேர்தல் களம் – நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்!
இந்நிலையில் இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அலாவுதீன் பூதத்தைப் போன்ற தோற்றத்தில் ஜெயம் ரவி இடம்பெற்றிருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.







