“மக்கள் இதயங்களில் இன்று வரை நீங்காத இடம் பெற்றிருப்பவர் ஜெயலலிதா” – நயினார் நாகேந்திரன்!

ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் ஜெயலலிதாவிற்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

“அரசியலில் இரும்புப்பெண்மணியாக இருந்து, அசைக்கமுடியாத வெற்றிகளைப் பெற்று, மக்கள் இதயங்களில் இன்றுவரை நீங்காத இடம் பெற்றிருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நினைவுநாளில் அன்னாரை நினைவுகூர்கிறேன்.

பெண்கள் முன்னேற்றம், தமிழக நலன், ஒன்றுபட்ட இந்தியா என்று பல வகைகளில் அவர் மேற்கொண்ட உறுதிமிக்க அரசியல் பயணம் என்றென்றும் அவர் புகழைப் பறைசாற்றும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.