தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்று 8,449 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,17,353 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 1,185 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,42,91,917 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை 1,74,308 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் 1,25,47,866 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை, 8,449 ஆக உள்ளது. மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4,920 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்







