வசூல் சாதனை படைக்கும் மலையாள திரைப்படம் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே

படத்திற்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக ஜெய ஜெய ஜெய ஜெய ஹே திரைப்படம் 35 கோடி வசூலித்துள்ளதால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறாது. சியர்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் சார்பில் லக்ஷ்மி வாரியர் & கணேஷ் மேனன்…

படத்திற்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக ஜெய ஜெய ஜெய ஜெய ஹே திரைப்படம் 35 கோடி வசூலித்துள்ளதால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறாது.

சியர்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் சார்பில் லக்ஷ்மி வாரியர் & கணேஷ் மேனன் தயாரிப்பில், விபின் தாஸ் இயக்கத்தில், பாசில் ஜோசப் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் முதன்மை வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே.

கடந்த மாதம் 28 ஆம் தேதி கேரளா மற்றும் ஜிசிசி திரையரங்குகளில் வெளியான இப்படம், பார்வையாளர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் சமீபத்திய மலையாள திரைத்துறையின் சாதனைகளைத் தகர்த்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இயக்குநர் விபின் தாஸ், நஷித் முகமது ஃபாமியுடன் இணைந்து இப்படத்தை எழுதியுள்ளார். இத்திரைப்படத்தில் பாசில் ஜோசப், தர்சனா ராஜேந்திரன், ஆனந்த் மன்மதன், அஜீஸ் நெடுமங்காட், சுதீர் பரவூர் ஆகியோருடன், பலர் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது வரை ஜெய ஜெய ஜெய ஜெய ஹே திரைப்படம் 35 கோடி வசூலித்துள்ளது. படத்திற்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக இப்படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே நவம்பர் 11, 2022 அன்று இந்தியாவின் பிற மாநிலங்களில் வெளியாகி, பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. கேரளாவில் வெளியான முதல் நாளிலேயே சுமார் 85 லட்சம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.