ஜவான் படத்தின் முதல் நாள் வசூல் 65 – 70 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லி. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கியுள்ளார். ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் ஆவல் அதிகமாகவே இருந்தது. படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் படத்தை தயாரிக்கவும் செய்தார் ஷாரூக். படம் வெளியாவதற்கு முன்னரே சுமார் 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் 65 – 70 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







