ஜவான் திரைப்படம் வெளியாகி இன்றுடன் பத்தாவது நாள் நிறைவடையும் நிலையில் இப்படம் ரூ.797.50 கோடியை வசூலை ஈட்டியுள்ளது.
இதுவரை இல்லாத அளவில் படத்துக்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைத்திருப்பதாகவும், படமும் சிறப்பாக இருப்பதாகவும் பாலிவுட் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. முதல் நாளில் இந்தி சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் உலகம் முழுவதும் ரூ.129 கோடி வசூலித்துள்ளதாகவும், இரண்டு நாட்களில் ரூ.240.47 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
உலகம் முழுவதும் 5நாள்களில் ரூ. 574.89 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், ஷாருக்கான் ஒரு வருடத்தில் தொடர்ந்து இரண்டு ₹500 கோடி வசூல் செய்த ஒரே நடிகர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றுள்ளார். ஏனெனில் ஷாருக்கான் கடைசியாக நடித்த பதான் திரைப்படமும் வசூலில் சாதனை புரிந்திருந்தது.
இந்த நிலையில் பத்தாவது நாளான இன்று ஜவான் படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் பட்டியலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி ஜவான் படம் கிட்டத்தட்ட ரூ.797.50 கோடியை வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ரூ.800 கோடியை நெருங்க உள்ளது ஜவான் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.







