சென்னை விமான நிலையத்தில் ஜவான் திரைப்பட குழு : செல்பி எடுக்க திரண்ட ரசிகர்கள்!

துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற நடிகர் ஷாருக்கான், இயக்குநர் அட்லி, அனிருத் ஆகியோருடன் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்பி எடுக்க முயன்றனர். ஜவான் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா துபாயில் இன்று…

துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற நடிகர் ஷாருக்கான், இயக்குநர் அட்லி, அனிருத் ஆகியோருடன் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்பி எடுக்க முயன்றனர்.

ஜவான் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ஷாருக்கான், இயக்குனர் அட்லி, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் துபாய் செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தனர்.

அனிருத்திடம் ரசிகர்கள் புகைப்படம் எடுப்பதற்கும் செல்பி எடுப்பதற்கும் ஆர்வம் காட்டினர். அப்போது ஆர்வம் மிகுதியால் விமான நிலைய நுழைவாயில் உள்ளே நுழைய முற்பட்டனர் .

அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் அவர்களை வெளியே தள்ள முயற்சி செய்தார்.இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து நடிகர் ஷாருக் கான், இயக்குனர் அட்லி வந்தனர். அவர்களுடன் ரசிகர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.