இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்திவரப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இருந்து படகில் மர்ம பொருள்
கொண்டு வரப்படுவதாக ராமநாதபுரம் உதவி சுங்கத்துறை ஆணையருக்கு தகவல் கிடைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருப்புல்லாணி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த சல்மான்கான் என்ற இளைஞரை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டபோது, அவரிடமிருந்து சுமார் 15 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
செய்யப்பட்டது.
இதன் மதிப்பு சுமார் 5 கோடி என கூறப்படுகிறது. சல்மான்கானை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், தங்கம் கடத்தல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.