வானில் ஜொலித்த சூப்பர் ப்ளூ மூன்; கண்டுகளித்த பொதுமக்கள்!

வானில் நேற்றிரவு முதல் காட்சியளிக்கும் சூப்பர் ப்ளூ மூன் இன்று காலை ஏழு முப்பது மணிக்கு அதிக பிரகாசத்துடன் ஒளிரத் தொடங்குகிறது. ஒரே மாதத்தில் இருமுறை பௌர்ணமி வரும்போது, மாதத்தின் 2-வது பௌர்ணமி சூப்பர்…

வானில் நேற்றிரவு முதல் காட்சியளிக்கும் சூப்பர் ப்ளூ மூன் இன்று காலை ஏழு முப்பது மணிக்கு அதிக பிரகாசத்துடன் ஒளிரத் தொடங்குகிறது.

ஒரே மாதத்தில் இருமுறை பௌர்ணமி வரும்போது, மாதத்தின் 2-வது பௌர்ணமி சூப்பர் புளூ மூன் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது பௌர்ணமி நாளான நேற்று வானில் சூப்பர் ப்ளூ மூன் தோன்றியது. இதைக்கண்டு உற்சாகமடைந்த பொதுமக்கள் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.

நேற்றிரவு 9.30 மணிக்கு அதிகபட்ச ஒளியுடன் சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வு தொடங்கியது. இதன் ஒளி படிப்படியாக அதிகரித்த நிலையில், இன்று காலை 7:30 மணிக்கு சூப்பர் ப்ளூ மூன் உச்சம் தொடுகிறது. அடுத்த சூப்பர் ப்ளூ மூன் 2037ம் ஆண்டு நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.