ஜவான் திரைப்படம் வெளியாகி 11-வது நாள் நிறைவடைந்த நிலையில் இப்படம் ரூ.858.68 கோடியை வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுவரை இல்லாத அளவில் படத்துக்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைத்திருப்பதாகவும், படமும் சிறப்பாக இருப்பதாகவும் பாலிவுட் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. முதல் நாளில் இந்தி சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் உலகம் முழுவதும் ரூ.129 கோடி வசூலித்துள்ளதாகவும், இரண்டு நாட்களில் ரூ.240.47 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.உலகம் முழுவதும் 5நாள்களில் ரூ. 574.89 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், ஷாருக்கான் ஒரு வருடத்தில் தொடர்ந்து இரண்டு ₹500 கோடி வசூல் செய்த ஒரே நடிகர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றுள்ளார். ஏனெனில் ஷாருக்கான் கடைசியாக நடித்த பதான் திரைப்படமும் வசூலில் சாதனை புரிந்திருந்தது.
Warning ⚠️: Smoking kills, and so does Vikram Rathore at the Box Office! 🔥
Go book your tickets now! https://t.co/B5xelUahHO
Watch #Jawan in cinemas – in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/X94c2nOzCi
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) September 18, 2023
10வது நாளான ஜவான் படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் கிட்டத்தட்ட ரூ.797.50 கோடியை வசூல் செய்ததாக படக்குழு நேற்று அறிவித்தது. அதனைதொடர்ந்து 11வது நாளாக ரூ.858.68 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஹிந்தி வெர்சனில் மட்டுமே ரூ.430.44 கோடி வசூலை பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.