அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் 13 மணி நேரம் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் அதிடி சோதனை நடத்தினர். இதில் 6 முக்கிய ரகசிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் கடந்த 2021ம் ஆண்ட ஜனவரி 20ம் தேதி பதவியேற்றார். இதற்கு முன்னதாக அதிபர் ஒபாமா ஆட்சி காலமான 2009ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை அமெரிக்காவின் துணை அதிபராக இருந்துள்ளார். இவர் துணை அதிபராக இருந்போது பல முக்கிய ஆவணங்களை திருடி தனது வீட்டில் பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அமெரிக்க அரசின் ரகசிய ஆணவங்களை அதிபர் ஜோ பைடன் வீட்டில் அதிகாரிகள் கண்டுபிடித்தன்ர். அந்த ஆவணங்களில் என்ன இருந்தது என்பது குறித்து வெளியிடப்படவில்லை. அதிபர் வீட்டில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக ராபர்ட் ஹூர் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து அமெரிக்க அடர்னி ஜெனரல் மெரிக் ஹார்லெண்ட் உத்தரவிட்டார்.இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு சொந்தமான டெலாவேர் வீட்டில் புலானய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை 13 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. சோதனையில் 6 ரகசிய ஆவணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு வரையிலான ஆணவங்கள் ஆகும்.
அதிபர் ஜோ பைடன் வீட்டில் இருந்து ரகசிய ஆவணங்கள் கைப்பற்றபட்ட நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி சோதனை அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.