ஜமுனாமரத்தூர் வனப் பகுதியில் உள்ள ஏரிகளில் 3000 லிட்டர் கள்ளச்சாராயத்தை போளூர் மதுவிலக்கு காவலர்கள் கீழே ஊற்றி அழித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் வனப்பகுதியில் போளூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் புனிதா தலைமையில் மதுவிலக்கு போலீசார் தீவிர சாராய ஒழிப்பு
வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஜமுனாமரத்தூர் சிங்கிணறு ஓடை மற்றும் ஆதமங்கலம்புதூர் ஏரி ஆகிய
பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 3000 லிட்டர்
ஊறல் களை மதுவிலக்கு காவலர்கள் கீழே ஊற்றி அழித்தனர்.
மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் அலுமினிய பாத்திரம்
மற்றும் பிளாஸ்டிக் பேரல்களை சேதப்படுத்தி அழித்தனர்.
ம. ஶ்ரீ மரகதம்







