6 வருடங்களுக்குப் பின் சந்தித்துக் கொண்ட ’தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ்’ குடும்பம்!!

6 வருடங்களுக்குப் பின்னர், முதுமலை புலிகள் காப்பகத்தில், பாகன் பொம்மன், பெள்ளி, குட்டி யானைகளான ரகு, பொம்மி ஆகியோரை நேரில் ’தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண குறும்படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வஸ் சந்தித்துள்ளார். நீலகிரி…

6 வருடங்களுக்குப் பின்னர், முதுமலை புலிகள் காப்பகத்தில், பாகன் பொம்மன், பெள்ளி, குட்டி யானைகளான ரகு, பொம்மி ஆகியோரை நேரில் ’தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண குறும்படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வஸ் சந்தித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் வளர்ப்பு முகாம் மிகவும் பிரசித்தி பெற்ற யானைகள் முகாம் ஆகும். இந்த முகாமில் தாயை பிரிந்த ரகு, பொம்மி என்ற இரு குட்டி யானைகள் உட்பட  20க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் பாராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே ரகு, பொம்மி ஆகிய இரண்டு குட்டி யானைகளுக்கும், அவற்றை கவனித்து வரும் பாகன் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளிக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு ’தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவண குறும்படம் வெளியிடப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு உதகையில் பயின்று வந்த கார்த்திகி கொன்சால்வஸ், இந்த ஆவண குறும்படத்தை இயக்கி, யூடியூப் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் மூலம் வெளியிட்டார்.

இதையும் படியுங்கள் : ட்விட்டரில் அதிக Followers-ஐ கொண்ட பெண் என்ற சிறப்பைப் பெற்றார் பாடகி ரியானா!!

இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 13 ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை ’தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ்’  வென்றது. இப்படத்தை இயக்கிய கார்த்திகி கொன்சால்வஸுக்கும், தயாரிப்பாளர் குனீத் மோங்காவுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், 6 வருடங்களுக்குப் பின்னர், முதுமலை புலிகள் காப்பகத்தில், பாகன் பொம்மன், பெள்ளி, குட்டி யானைகளான ரகு, பொம்மி ஆகியோரை நேரில் கார்த்திகி கொன்சால்வஸ் சந்தித்துள்ளார். ஆஸ்கர் விருதுடன் அவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கார்த்திகி, “ஆறு வருடங்களுக்குப் பின்னர், எல்லாம் தொடங்கிய இடத்தில், மீண்டும் ஒரே குடும்பமாக….” என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.