முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள்: சென்னை காவல் ஆணையர் விளக்கம்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் இருசக்கர வாகன பேரணி மற்றும் நடைபிரச்சாரம் நடைபெற்றது. இதனை, பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாலை விபத்துக்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் குறித்து ஆய்வுசெய்யப்பட்டு அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் எனக்கூறிய அவர், சென்னையில் அனுமதி இல்லாமல் பேரணி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் தமிழக அரசு விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறியுள்ளார். ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் மூலம் எல்லா சிக்னல்களிலும் நவீன கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழகம் வளர்ச்சியடையும்: எடப்பாடி பழனிசாமி

Halley karthi

ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான பாஜகவின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: மாணவி மனு

Ezhilarasan

வரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்! – லாரி உரிமையாளர்கள் சங்கம்

Jayapriya

Leave a Reply