ஜல்லிக்கட்டு வீரர் அபி சித்தர் தொடர்ந்த வழக்கு! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டாம் இடம் பிடித்த அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்த நிலையில், ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டாம் இடம் பிடித்த அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்த நிலையில், ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றது.  இங்கு நடைபெறும் போட்டிகளை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் திரளாக படையெடுத்து செல்வார்கள்.

இதனிடையே இந்தாண்டு கூடுதல் விருந்தாக கீழக்கரை பிரமாண்ட மைதானத்திலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.  இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டாம் இடம் பிடித்த அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனுவை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் விசாரணை செய்தனர்.

இதையும் படியுங்கள்:  குடிசை மாற்று வாரியத்தை அறிமுகப்படுத்தியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த மாடுபிடிவீரர் அபி சித்தர் தாக்கல் செய்த மனுவில்,  “தன்னைவிட ஒரு காளை குறைவாக அடக்கிய வீரர் கார்த்திக்கை முதல் பரிசு பெற்றதாக அறிவித்தது செல்லாது” என குற்றச்சாட்டியுள்ளார்.  இந்த வழக்கில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.