நத்தம் அருகே அய்யாபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள அய்யாபட்டியில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது – திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.…

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள அய்யாபட்டியில் காளியம்மன்
கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது –

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கோயில்
திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியை,
திண்டுக்கல் கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார் . இதில் திண்டுக்கல், மதுரை,
தேனி, திருச்சி மற்றும் சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு
மாவட்டங்களில் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

முன்னதாக காளைகளை கால்நடை மருத்துவத்துறையினர் சோதனை செய்தனர்.
தொடர்ந்து, மாடு பிடி வீரர்களையும் சுகாதாரத்துறை முழு மருத்துவ பரிசோதனை
செய்தது. பின்னர் மாடு பிடிப்பதற்கு அனுமதித்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில்
காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும்
பரிசுகள் வழங்கப்பட்டது. இப்போட்டியில், 200க்கும் மேற்பட் போலீசார் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டனர்.

—கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.