ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், செவிலியர்கள்
கேக் வெட்டி செவிலியர் தினத்தை கொண்டாடினர்.
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில், செவிலியர்கள்
கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், அனைத்து செவிலியர்களும் ஒருங்கிணைந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அதன் பின்னர், கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதனை தொடர்ந்து, அனைத்து செவிலியர்களும் மெழுகுதிரி ஏந்தி உறுதிமொழி
எடுத்துக்கொண்டனர். இதில் அனைத்து நோயாளிகளுக்கும் பாகுபாடு இல்லாமல்
சிகிச்சை கொடுப்பதும், சுயநலம் கருதாமல் பொதுநலத்தோடு அனைவருக்கும்
உதவி செய்து நோயாளிகளை குணப்படுத்துவது உள்ளிட்ட, பல்வேறு
உறுதிமொழிகளை செவிலியர்கள் ஏற்றுக்கொண்டனர்.
—-கு. பாலமுருகன்







