தமிழகம்

3 ஆண்டுகளுக்குப் பிறகு சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு: 300 காளைகள், 500 வீரர்கள் பங்கேற்பு

சேந்தமங்கலம் அருகே உள்ள ஜங்களாபுரத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், 300 காளைகளும், 500 வீரர்களும் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள ஜங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி, மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், காவல் கண்காணிப்பாளர் ச.கலைச்செல்வன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து போட்டி நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்று காலை 8 மணியளவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை தொடங்கி வைத்தார். இதில், 300 காளைகளும், 500க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றனர். 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு நடைபெற்றதால் ஆர்வத்துடன் வீரர்கள் பங்கேற்று காளைகளை மடக்கிப் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், நாமக்கல் கோட்டாட்சியர் த.மஞ்சுளா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இறந்து பிறந்த குழந்தை; மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

EZHILARASAN D

கறுப்பு பணம், விலைவாசி உயர்வு…நாடாளுமன்றத்தில் பொங்கி எழுந்த கனிமொழி

Web Editor

ஒத்த ஆளா புடி… கார் வாங்கிட்டு போ.!

G SaravanaKumar