’ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக தொடங்கியது. படத்தின் அனைத்து பாடல்களும் இணையத்தை கலக்கி வருகின்றன.
இந்த படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். ஆக்ஷன் படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாடலான ”ஹுக்கும்” எனப்பெயரிடப்பட்ட பாடல் வெளியானது.
’ஜெயிலர்’ படத்தின் மூன்றாவது பாடலான “ஜுஜுபி” பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் ஜெயிலர் திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 10 முதல் முத்துவேல் பாண்டியனின் ஆவேசத்தைக் காண தயாராகுங்கள் என படக்குழு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
https://twitter.com/sunpictures/status/1684923036942974976
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 7 மணியளவில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இந்த இசைவெளியீட்டு விழாவிற்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் மிகுந்த ஆவளுடன் வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.







