சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெய்லர் படத்தில் புஷ்பா பட வில்லன் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்கிய ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெய்லர் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 60% அளவிற்கு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து பல மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்ற புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் சுனில் ரஜினியின் ஜெய்லர் படத்தில் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.







