சூப்பர் ஸ்டார் உயரத்தை தொடவும் முடியாது, ஜெயிலர் சாதனையை வெல்லவும் முடியாது, அர்த்தமைந்தா ராஜா என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டியுள்ள அஜித் ரசிகர்கள்.
கோவையில் ரஜினிகாந்த் ஆதரவாக அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர். நாளை
உலகம் எங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெய்லர் திரைப்படம்
வெளியாக உள்ளது. இந்நிலையில் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே யார் சூப்பர்
ஸ்டார் என்ற சர்ச்சை திரையுலகத்தில் எழுந்துள்ளது.
நடிகர் விஜய் படங்கள் அதிக வசூல் ஈட்டுவதால் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் எனவும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார் எனவும் தொடர்ந்து கருத்து மோதல்கள் சமூக வலைத்தளங்களிலும் திரையுலக நட்சத்திரங்களுக்கும் இடையே ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில் ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார் என அவருக்கு ஆதரவாக அஜித் ரசிகர்கள் கோவையில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.
அதில் சூப்பர் ஸ்டார் உயரத்தைத் தொடவும் முடியாது ஜெயிலர் சாதனையை
வெல்லவும் முடியாது அர்த்தம் மைந்தா ராஜா என்ற வாசகத்துடன் போஸ்டர் ஆனது
ஒட்டப்பட்டுள்ளது. போஸ்டரில் அஜித் மற்றும் ரஜினி புகைப்படங்கள் இடம்
பெற்றுள்ளன.







